ஜூன் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
ஜூன் 1 கிரிகோரியன் ஆண்டின் 152ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 153ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 213 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 193 - ரோமப் பேரரசர் டிடியஸ் ஜூலியானஸ் படுகொலை செய்யப்பட்டார்.
- 1215 - மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரைக் கைப்பாற்றினான்.
- 1485 - ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைப்பற்றினான்.
- 1533 - ஆன் பொலெய்ன் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
- 1605 - மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1792 - கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
- 1796 - டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
- 1812 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக் கேட்டுக்கொண்டார்.
- 1831 - ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.
- 1855 - அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.
- 1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.
- 1879 - பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ-சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.
- 1910 - ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென் முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.
- 1941 - ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1946 - ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- 1947 - சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.
- 1959 - நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.
- 1962 - நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ஃப் ஐக்குமன் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.
- 1964 - சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.
- 1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1978 - டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
- 1979 - 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
- 1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
- 1981 - யாழ் பொது நூலகம் மே 31 நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
- 2001 - நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- 1968 - ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (பி. 1880)
- 1979 - வேர்னர் ஃபோர்ஸ்மன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
- 1999 - கிறிஸ்தோபர் கொக்கரல், காற்று மெத்தை உந்தைக் கண்டுபிடித்தவர் (பி. 1910)
- 1996 - நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் (பி. 1913)
- 2001 - பிரேந்திரா, நேபாள மன்னர் (பி. 1945)
[தொகு] சிறப்பு நாள்
- பன்னாட்டு குழந்தைகள் நாள்
- சமோவா - விடுதலை நாள் (1962)
- துனீசியா - அரசியல் நிர்ணய நாள், வெற்றி நாள் (1959)