கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நவம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 325வது நாளாகும். நெட்டாண்டுகளில் 326வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1272 - இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி மன்னன் நவம்பர் 16இல் மறைவையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
- 1791 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.
- 1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.
- 1894 - சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
- 1916 - பிரித்தானியக் கப்பலான HMHS பிரித்தானிக் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
- 1920 - டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
- 1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக தபால் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடபட்ட முதல் தபால் தலையின் விலை மூன்றரை அணா.
- 1962 - சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
- 1963 - பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது.
- 1969 - முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
- 1969 - ஓக்கினாவா தீவை ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் 1972 இல் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில் கைச்சாத்திடப்பட்டது.
- 1971 - வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாஹினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடித்தன.
- 1974 - பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980 - நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
- 1996 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
- 2004 - டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மௌத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புகள்