ஜனவரி 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 20 கிரிகோரியன் ஆண்டின் 20வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 345 (நெட்டாண்டுகளில் 346) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1265 - இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.
- 1649 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1783 - பெரிய பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.
- 1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி பே என்ற இடத்தை அடைந்தன.
- 1795 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
- 1839 - யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.
- 1841 - ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.
- 1887 - பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.
- 1906 - வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.
- 1913 - யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- 1936 - எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ரோயல் வான்படையினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.
- 1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
- 1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.
- 1981 - ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
- 1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
- 1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
- 1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
- 2001 - பிலிப்பீன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.
[தொகு] பிறப்புகள்
- 1873 - ஜொஹன்னஸ் வில்ஹெம் ஜென்சென், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)
- 1931 - டேவிட் லீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
[தொகு] இறப்புகள்
- 1936 - ஐந்தாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1865)