மார்ச் 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 26 கிரிகோரியன் ஆண்டின் 85ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 86ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 280 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1199 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்சை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தான். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தான்.
- 1552 - குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.
- 1812 - வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது.
- 1871 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
- 1872 - கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
- 1917 - முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.
- 1934 - ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் முதற்தடவையாக பெண்கள் சிறைக்கைதிகளாயினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
- 1953 - ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.
- 1958 - ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.
- 1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1979 - இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தம் வாஷிங்டனில் கைச்சாத்தானது.
- 1997 - சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.
- 1998 - அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2006 - மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.
- 2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.
- 2005 - தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.
- 2006 - முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
- 2007 - கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
[தொகு] பிறப்புக்கள்
- 1874 - றொபேட் ஃபுறொஸ்ட் அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)
- 1916 - கிறிஸ்டியன் ஆன்பின்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1995)
- 1938 - அந்தனி லெகெட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1951 - Carl Wieman, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
[தொகு] இறப்புக்கள்
- 1827 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் (பி. 1770)
- 1892 - வால்ட் விட்மான், அமெரிக்கக் கவிஞர் (பி. 1819)
[தொகு] சிறப்பு நாள்
- வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)