ஜனவரி 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் 7ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1325 - போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினான்.
- 1598 - ரஷ்யாவின் ஆட்சியை போரிஸ் கூதுனோவ் கைப்பற்றினான்.
- 1608 - வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
- 1610 - கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு இயற்கை செய்மதிகளைக் கண்டறிந்தார்.
- 1841 - யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1894 - வில்லியம். கே. டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1927 - அட்லாண்டிக் பெருங்கடலுக்கிடையே முதலாவது தொலைபேசிச் செய்தி நியூ யோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் பரிமாறப்பட்டது.
- 1935 - முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
- 1950 - அயோவாவில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
- 1953 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.
- 1959 - பிடல் காஸ்ட்ரோவின் கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
- 1972 - ஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
- 1979 - வியட்நாமியப் படைகளிடம் நொம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவரது படைகளும் பின்வாங்கினர்.
- 1990 - பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
- 2006 - திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1502 - பாப்பரசர் 13வது கிரெகரி, (இ. 1585)
- 1925 - தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமூக சேவையாளர்
- 1941 - ஜோன் வோக்கர், ஆங்கிலேய வேதியியலாளர்
- 1948 - இசிரோ மிசுகி, யப்பானியப் பாடகர்
- 1979 - பிபாசா பாசு, இந்திய நடிகை
[தொகு] இறப்புகள்
- 1984 - ஆல்பிரட் காஸ்லர், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1902)
- 1998 - விளாடிமிர் பிரெலொக், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி.1906)