ஜூன் 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
ஜூன் 6 கிரிகோரியன் ஆண்டின் 157ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 158ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1508 - புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.
- 1644 - கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர்.
- 1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
- 1752 - மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன.
- 1761 - சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.
- 1808 - நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.
- 1832 - பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
- 1844 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
- 1859 - குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1882 - அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- 1912 - அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
- 1930 - இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது.
- 1971 - சோயுஸ் 11 ஏவப்பட்டது.
- 1974 - சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.
- 1981 - இந்தியாவில் தொடருந்து ஒன்று பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1984 - இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
- 1993 - மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.
- 2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1799 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)
- 1893 - கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974)
- 1901 - சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இ. 1970)
- 1930 - சுனில் தத், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2005)
- 1948 - சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)
- 1986 - பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை
[தொகு] இறப்புகள்
- 1968 - ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1925)
- 1996 - ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- 2007 - வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பி. 1939)
- 2008 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)
[தொகு] சிறப்பு நாள்
- தமிழீழம் - மாணவர் எழுச்சி நாள்
- சுவீடன் - தேசிய நாள்
- தென் கொரியா - நினைவு நாள்
- குயின்ஸ்லாந்து நாள்