மார்ச் 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டின் 74ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 75ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 44 - ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.
- 933 - பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் ஜெர்மானிய மன்னன் முதலாம் ஹென்றி ஹங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
- 1493 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.
- 1776 - தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.
- 1802 - இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.
- 1815 - நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.
- 1848 - ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. ஹாப்ஸ்பேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
- 1877 - முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ணில் ஆரம்பமானது.
- 1917 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் த்சார் மன்னன் முடி துறந்தான்.
- 1922 - எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்னனானான்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியப் படைகள் உக்ரேனின் ஹார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.
- 1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.
- 1970 - எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.
- 1984 - விடுதலைப் புலிகளின் ஆதிகாரபூர்வ ஏடு விடுதலைப் புலிகள் வெளியிடப்பட்டது.
- 1985 - முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.
- 1988 - ஈராக்கியப் படைகள் குருதிய நகரான ஹலப்ஜா மீது இரசாயன நச்சுக் குண்டுகளை வீச ஆரம்பித்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 - பிரித்தானிய ஊடகவியலாளர் பர்சாட் பாசொஃப்ட் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டார்.
- 1990 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.
- 1991 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.
- 2004 - சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.
- 2007 - இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1767 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1845)
- 1830 - பவுல் ஹெயிஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் (இ. 1914)
- 1854 - எமில் பேஹ்ரிங்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1917)
- 1915 - அழகு சுப்பிரமணியம் ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)
- 1920 - டொன்னல் தோமஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1930 - அல்ஃவியோரவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர்
[தொகு] இறப்புக்கள்
- கிமு 44 - யூலியஸ் சீசர், ரோமன் குடியரசின் மன்னன் (பி. கிமு 100)
- 1897 - ஜேம்ஸ் சில்வெஸ்டர், கணிதவியலர் (பி. 1814)
- 1962 - ஆர்தர் கொம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1892)
- 2004 - ஜோன் போப்பில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1925)
[தொகு] சிறப்பு நாள்
- ஜப்பான் - ஒவுனென் மட்சுறி, புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா.
- உலக நுகர்வோர் நாள்