ஜனவரி 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 4 கிரிகோரியன் ஆண்டின் 4ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 361 (நெட்டாண்டுகளில் 362) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 46 - ருஸ்பீனா என்ற நகரில் இடம்பெற்ற சமரில் டைட்டஸ் லபீனஸ் ஜூலியஸ் சீசரைத் தோற்கடித்தான்.
- 1493 - கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
- 1642 - இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினான்.
- 1698 - லண்டனில் அரச மாளிகையான வைட்ஹோல் தீயினால் சேதமுற்றது.
- 1717 - நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தின.
- 1762 - ஸ்பெயின் மற்றும் நேப்பில்ஸ் மீது இங்கிலாந்து போரை அறிவித்தது.
- 1847 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விலைக்கு விற்றார்.
- 1854 - கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- 1889 - இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- 1948 - பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது.
- 1951 - சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.
- 1958 - முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
- 1959 - லூனா 1 விண்கலம் சந்திரனுக்கு மிக அண்மையில் சென்றது.
- 1990 - பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - அல்ஜீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2004 - ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
[தொகு] பிறப்புகள்
- 1643 - சேர் ஐசக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (இ. 1727)
- 1809 - லூயி பிறெயில், (இ. 1852)
- 1940 - பிறையன் டேவிட் ஜோசெப்சன், நோபல் பரிசு பெற்றவர்
- 1940 - காவோ சிங்ஜியான், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்
- 1945 - ரிச்சார்ட் ஷ்ரொக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1984 - ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்
[தொகு] இறப்புகள்
- 1960 - அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1913)
- 1965 - டி. எஸ். எலியட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1888)