ஜூன் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
ஜூன் 3 கிரிகோரியன் ஆண்டின் 154ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 155ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1539 - ஸ்பானிய நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினான்.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வேர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கினர்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் ஜெர்மன் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின.
- 1962 - பிரான்சின் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
- 1965 - நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
- 1969 - தெற்கு வியட்நாமில் ”மெல்பேர்ன்” என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.
- 1984 - அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.
- 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
- 1991 - ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.
- 1998 - ஜெர்மனியில் கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.
- 2006 - மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
- 2007 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 2007 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1808 - ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889)
- 1924 - மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்
- 1931 - ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத் தலைவர்
- 1961 - லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர்
- 1966 - வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர்
[தொகு] இறப்புகள்
- 1657 - வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1578)
- 1963 - பாப்பரசர் 23ம் ஜோன், (பி. 1881)
- 1975 - எய்சாக்கு சாட்டோ, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
- 1989 - அயதொல்லா கொமெய்னி, ஈரானிய மதத் தலைவர் (பி. 1900)
- 1990 - ராபர்ட் நாய்சு, அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1927)
- 2000 - ஜெய்சங்கர், தமிழ் நடிகர்
- 2001 - அந்தனி குயின், ஹாலிவுட் நடிகர் (பி. 1915)
- 2007 - ரத்னமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை