செப்டம்பர் 12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 255வது நாளாகும். நெட்டாண்டுகளில் 256வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 110 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 490 - கிரேக்கத்தில் மாரதோன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கிறீஸ் பேர்சியாவைத் தோற்கடித்தது.
- 1848 - சுவிட்சர்லாந்து சமஷ்டி ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
- 1857 - வடக்கு கரோலினாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 426 பேர் கொல்லப்பட்டனர். இக்கப்பலில் 13-15 தொன் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.
- 1948 - இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் நகரில் நுழைந்தது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
- 1974 - எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மன்னர் ஹைலி செலாசி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1977 - தென்னாபிரிக்காவின் நிறக்கொள்கைக்கெதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.
- 1980 - துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1992 - நாசாவின் எண்டெவர் விண்ணோடம் கருப்பு-அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 2001 - ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான ஆன்செட் ஆஸ்திரேலியா மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.
- 2005 - காசாவில் இருந்து இஸ்ரேல் தனது முழுப் படையினரையும் திருப்பி அழைத்தது.
- 2005 - ஹொங்கொங்கில் ஹொங்கொங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது.
- 2006- பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது "தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்" என்று தெரிவித்தார். இதற்கு இஸ்லாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து பாப்பரசர் மன்ன்னிப்புக் கேட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1832 - சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி, (இ. 1901)
- 1943 - மைக்கல் ஒண்டாட்ஜி (Michael Ondaatje), இலங்கையில் பிறந்த எழுத்தாளர்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- கேப் வேர்டி - தேசிய நாள்
- எதியோப்பியா - தேசியப் புரட்சி நாள் (1974)