பெப்ரவரி 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | பெப்ரவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | |
MMVIII |
பெப்ரவரி 27 கிரிகோரியன் ஆண்டின் 58 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1560 - ஸ்கொட்லாந்தில் இருந்து பிரெஞ்சுக்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பேர்விக் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1594 - பிரான்சின் மன்னனாக நான்காம் ஹென்றி முடிசூடினான்.
- 1700 - புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
- 1801 - வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
- 1844 - டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1861 - போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
- 1879 - சக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
- 1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் போவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையயின்றி சரணடைவதாக அறிவித்தார்.
- 1900 - பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
- 1933 - பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- 1940 - ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன.
- 1951 - ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
- 1967 - டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1976 - முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா சாராவி அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
- 1991 - வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவெய்த் விடுதலையானதாக அறிவித்தார்.
- 2002 - குஜராத் வன்முறை 2002: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2004 - பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1807 - ஹென்றி லோங்ஃபெலோ, அமெரிக்க கவிஞர் (இ. 1882)
- 1902 - ஜோன் ஸ்டெயின்பெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1968)
- 1926 - டேவிட் ஹியூபெல், நோபல் பரிசு பெற்ற கனடியர்
- 1942 - ரொபர்ட் கிரப்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
[தொகு] இறப்புகள்
- 1869 - அல்போஃன்ஸ் தெ லமர்த்தின், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1790)
- 1936 - இவான் பாவ்லொவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (பி. 1849)
- 1989 - கொன்ராட் லொரென்ஸ், நோபல் பரிசு பெற்ற விலங்கியலாளர் (பி. 1903)
- 1998 - ஜோர்ஜ் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1905)
[தொகு] சிறப்பு நாள்
- டொமினிக்கன் குடியரசு - தேசிய நாள்