மே 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மே 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVIII |
மே 2 கிரிகோரியன் ஆண்டின் 122ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 123ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1568 - ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள்.
- 1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1814 - முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.
- 1876 - பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது.
- 1885 - புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான்.
- 1889 - எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
- 1933 - ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.
- 1952 - உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.
- 1964 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
- 1964 - 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
- 1982 - போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
- 2002 - கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்அக்ளில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
- 2004 - நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.
- 2006 - குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1921 - சத்யஜித் ராய், இந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1992)
- 1969 - பிறயன் லாறா, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாளர்
- 1983 - ஈழநிலா, ஈழத்துக் கவிஞர்
[தொகு] இறப்புகள்
- 1519 - லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (பி. 1452)
[தொகு] சிறப்பு நாள்
- போலந்து - கொடி நாள்
- ஈரான் - ஆசிரியர் நாள்
- இந்தோனீசியா - தேசிய கல்வி நாள்