ஜூலை 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 1, கிரிகோரியன் ஆண்டின் 182வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 183வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.
- 1881 - உலகின் முதலாவது அனைத்துலக தொலைத்தொடர்பு அழைப்பு கனடாவின் St. Stephen நகருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் Calais நகரத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- 1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.
- 1921 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1960 - சோமலியா விடுதலை அடைந்தது.
- 1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது.
- 1962 - புருண்டி விடுதலை அடைந்தது.
- 1978 - அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியம் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றது.
- 1979 - சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.
- 1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது.
- 1997 - 156 வருட பிரித்தானிய ஆட்சியின் பின்னர் ஹாங்காங்கின் ஆட்சி அதிகாரத்தை சீனா பெற்றது.
- 2002 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) உருவாக்கப்பட்டது.
- 2006 - கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.
[தொகு] பிறப்புகள்
- 1924 - தி. ச. வரதராசன், ஈழத்து மறுமலர்ச்சி எழுத்தாளர் (இ. 2006)
- 1927 - சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர்
- 1935 - டி. ஜி. எஸ். தினகரன், இந்தியாவின் முன்னணி கிறிஸ்தவ மறைபரப்புனர்
- 1961 - கல்பனா சாவ்லா - விண்வெளி வீராங்கனை (இ. 2003)
- 1961 - டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)
- 1961 - கார்ல் லூயிஸ் - அமெரிக்க ஓட்ட வீரர்
[தொகு] இறப்புகள்
- 1965 - வால்ரர் ஹமொண்ட் - ஆங்கில துடுப்பாளர் (பி. 1903)
- 2001 - நிக்கலாய் பாசொவ் (Nikolay Basov), ரஷ்ய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
- 1971 - வில்லியம் பிராக் (William Lawrence Bragg), நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1890)
[தொகு] சிறப்பு நாள்
- கனடா - கனடா நாள்