ஜனவரி 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 27 கிரிகோரியன் ஆண்டின் 27வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 (நெட்டாண்டுகளில் 339) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1695 - ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னனானான்.
- 1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.
- 1915 - ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
- 1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
- 1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
- 1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
- 1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
- 1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
- 1996 - நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
- 2002 - நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1756 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)
- 1775 - பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1854)
- 1832 - லூயிஸ் கரோல், ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1898)
- 1903 - ஜோன் எக்கில்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (இ. 1997)
- 1936 - சாமுவேல் டிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1944 - மைரேயட் கொரிகன், நோபல் பரிசு பெற்றவர்
- 1974 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
[தொகு] இறப்புகள்
- 1814 - ஜொகான் ஃபிக்டே, ஜேர்மனிய மெய்யியல் அறிஞர் (பி. 1762)
- 1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
- 1967 - அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்: