ஜூலை 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 29 கிரிகோரியன் ஆண்டின் 210வது நாளாகும். நெட்டாண்டுகளில் 211வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1900 - இத்தாலியின் மன்னர் முதலாம் உம்பேர்ட்டொ கொலை செய்யப்பட்டார்.
- 1907 - சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
- 1921 - ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியை அமைத்தார்.
- 1944 - இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1948 - இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.
- 1957 - அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1959 - ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.
- 1967 - வெனிசுவேலா நாட்டின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
- 1981 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.
- 1987 - இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
- 1987 - இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
- 1999 - இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
- 2005 - பத்தாவது கோள் எரிஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1883 - முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)
- 1904 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993)
[தொகு] இறப்புகள்
- 1913 - டோபியாஸ் மக்கல் ஆசர் (Tobias Michael Carel Asser), நோபல் பரிசு பெற்றவர் (பி. 1838)
- 1999 - நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி