அக்டோபர் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 13 கிரிகோரியன் ஆண்டின் 286வது நாளாகும். நெட்டாண்டுகளில் 287வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 79 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 54 - ரோம் மன்னன் கிளோடியஸ் அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதினால் அவளது மகன் நீரோ (படம்) ரோமின் மன்னனானான்.
- 1492 - கொலம்பசும் அவரது குழுவினரும் பஹாமாசை அடைந்தனர்.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்த நாள் நாட்காட்டிகளில் இல்லை.
- 1792 - வாஷிங்டன், டிசி அமைக்கப்பட்டது.
- 1884 - அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.
- 1917 - யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று வார்டுகளாகப் பிரிக்கப்பட்டன.
- 1923 - துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா ரஷ்ய இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டது.
- 1953 - இலங்கைப் பிரதமர் பதவியை டட்லி சேனநாயக்கா துறந்தார்.
- 1972 - மொஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
- 1976 - பொலீவியாவைச் சேர்ந்த போயிங் சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 குழந்தைகள் உட்பட 100 கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1911 - அசோக் குமார், இந்திய நடிகர், (இ. 2001)
- 1925 - மார்கரட் தாட்சர், இங்கிலாந்து முன்னாள் பிரதம மந்திரி
- 1925 - லென்னி புரூஸ், அமெரிக்க நகைச்சுவை நடிகர் (பி. 1966)