செப்டம்பர் 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 268வது நாளாகும். நெட்டாண்டுகளில் 269வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 97 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1846 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் சாச்செரி டெய்லர் தலைமையில் மெக்சிக்கோவின் மொண்டெறே நகரைக் கைப்பற்றினர்.
- 1959 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் மரணமானார்.
- 1978 - கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் 144 பயணிகள் கொல்லப்பட்டனர்.
- 1992 - யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.
- 2002 - குஜராத் மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1899 - உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (இ. 1981)
[தொகு] இறப்புகள்
- 1978 - ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (பி. 1923
- 1986 - நிக்கலாய் செமியோனொவ், ரஷ்ய வேதியியலாளர், [[நோபல் பரிசு] பெற்றவர் (பி. 1896)
- 2003 - எட்வர்ட் செயிட், ஆங்கில ஒப்பாய்வுத்துறை அறிஞர் (பி. 1935)
[தொகு] சிறப்பு நாள்
- மொசாம்பிக் - பாதுகாப்புப் படையினர் நாள்