நவம்பர் 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 319வது நாளாகும். நெட்டாண்டுகளில் 320வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1505 - முதல் போர்த்துக்கேயன் லோரன்ஸ் டி. அல்மேடா, கொழும்பு வந்தான்.
- 1889 - பிரேசில் குடியரசகியது. மன்னன் இரண்டாம் பெட்ரோ ஆட்சியிழந்தான்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.
- 1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
- 1949 - நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
- 1966 - ஜெமினி திட்டம்: ஜெமினி 12 விண்கப்பல் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
- 1969 - வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கு பற்றினர்.
- 1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.
- 1971 - இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.
- 1978 - டிசி-8 ரக பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் பலி.
- 1983 - வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது.
- 1988 - சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
- 1988 - பாலஸ்தீன சுதந்திர நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.
- 1990 - அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
- 2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1738 - வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)
- 1986 - சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை.
[தொகு] இறப்புகள்
- 1630 - ஜொஹான்னெஸ் கெப்லர், ஜெர்மானிய கணிதவியலாளரும், வானியலாளரும் (பி. 1571)
- 1961 - இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர்.
- 1982 - வினோபா பாவே, (பி. 1895)
[தொகு] சிறப்பு நாள்
- பிரேசில் - குடியரசு நாள் (1889)
- பாலஸ்தீனம் - விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)