நவம்பர் 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 313வது நாளாகும். நெட்டாண்டுகளில் 314வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1793 - மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
- 1799 - பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
- 1872 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் ந்கரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டலப்க்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.
- 1887 - ஐக்கிய அமெரிக்கா ஹவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.
- 1888 - கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.
- 1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
- 1921 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
- 1937 - ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
- 1953 - கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
- 1963- ஜப்பான் யோகோஹாமா என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 - அப்பல்லோ திட்டம்: நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லொ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
- 1985 - சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கஸ்பரோவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1989 - பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
- 1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
- 2005 - ஜோர்தானின் அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1918 - கியோம் அப்போலினேர், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880)
- 2005 - கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921) .
- 2006 - வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920)