கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செப்டம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 247வது நாளாகும். நெட்டாண்டுகளில் 248வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 118 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1781 - லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.
- 1888 - ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் "கோடாக்" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார்.
- 1956 - ஐபிஎம் தனது முதலாவது வர்த்தகக் கணினியான RAMAC 305 இன் பாவனைக்காக காந்த தரவு சேமிப்பானை (magnetic disc storage) அறிமுகப்படுத்தியது.
- 1963 - சுவிஸ் எயார் விமானம் சுவிட்சர்லாந்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1970 - சல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார்.
- 1971 - அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதி பயணம் செய்த 111 பேரும் கொல்லப்பட்டனர்..
- 1996 - கொலம்பிய புரட்சி இராணுவப் படையினர் கொலம்பியாவின் இரணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த இக்கரந்தடிப் போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புகள்