மே 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மே 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVIII |
மே 5 கிரிகோரியன் ஆண்டின் 125ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 126ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 240 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1260 - மங்கோலியப் பேரரசின் மன்னனாக குப்ளாய் கான் முடி சூடினான்.
- 1762 - ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின.
- 1916 - டொமினிக்கன் குடியரசை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்.
- 1925 - தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது.
- 1936 - எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றினர்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: நாடு கடந்த நிலையில் நோர்வேயின் அரசு லண்டனில் அமைக்கப்பட்டது.
- 1941 - எதியோப்பியாவின் மன்னார் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்பினார். இந்நாள் அங்கு விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 1942 - பிரித்தானியப் படையினர் மடகஸ்காரைத் தாக்கினர்.
- 1944 - மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் படைகள் கனடா மற்றும் பிரித்தானியப் படைகளினால் நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளில் இருந்து விரட்டப்பட்டனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: நாசிகளை எதிர்த்து பிராக் நகரில் கிளர்ச்சி ஆரம்பித்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரியாவின் நாசிகளின் மோதோசென் வதை முகாம் விடுவிக்கப்பட்டது.
- 1950 - தாய்லாந்தின் ஒன்பதாவது ராமா மன்னராக பூமிபால் அடுள்யாடெ முடி சூடினார்.
- 1955 - மேற்கு ஜேர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.
- 1961 - மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பார்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.
- 1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
- 1980 - ஆறு நாட்களாக தீவிரவாதிகளினால் முற்றுகையிடப்பட்டிருந்த லண்டனின் ஈரானியத் தூதரகத்தின் மீது வான்படையினார் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1981 - ஐரிஷ் புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் உண்ணாவிரதமிருந்து இறந்தார்.
- 1991 - ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தனது 23 ஆம் வயதில் தற்கொலை செயதுகொண்டார்.
- 2006 - சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 2007 - கென்யாவின் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1818 - கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (இ. 1883)
- 1916 - பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1951)
- 1916 - ஜெயில் சிங், இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1994))
- 1922 - டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட நடிகை
- 1933 - இரத்னசிறி விக்கிரமநாயக்கா, இலங்கையின் 11வது, 14வது பிரதம மந்திரி
- 1948 - பிச்சுமணி கைவல்யம், தமிழ்க் கவிஞர்
- 1964 - ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர்
[தொகு] இறப்புகள்
- 1821 - நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (பி. 1769)
- 1948 - புதுமைப்பித்தன், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி (பி. 1906)
- 1957 - ஆர். மகாதேவன் (தேவன்), நகைச்சுவை எழுத்தாளர் (பி. 1913)
- 1981 - பொபி சான்ட்ஸ், ஐரிஷ் புரட்சியாளர் (பி. 1954)
- 1991 - சிவரமணி, ஈழத்துக் கவிஞை
- 2006 - நெளஷத் அலி, இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1919)
[தொகு] சிறப்பு நாள்
- சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள் (International Midwives Day)
- அல்பேனியா - மாவீரர் நாள்
- டென்மார்க் - விடுதலை நாள் (1945)
- எதியோப்பியா - விடுதலை நாள் (1941)
- நெதர்லாந்து - விடுதலை நாள் (1945).
- தென் கொரியா - சிறுவர் நாள்