விமானம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விமானம் அல்லது வானூர்தி என்பது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கும் ஒரு ஊர்தி. இவ்வகை பறக்கும் இயந்திரங்களாகிய வானூர்திகள் சுமார் 300-500 மக்களையும் பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக தரையில் இருந்து 9000-14000 மீட்டர் உயரத்திலே பறந்து எடுத்துச் செல்ல வல்ல போகுவரத்து ஊர்திகள். இவ்வகை ஊர்திகளில் பன்னூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. செங்குத்தாக எழுந்து பறக்க வல்ல உலங்கு வானூர்திகள் (helicopters), ஒலியின் வேகத்தையும் கடந்து செல்லும் வல்லமை படைத்த மீயொலி விரைவானூர்திகள் supersonic மற்றும் பல்வகை திறம் படைத்த போர் வானூர்திகள் என்று பற்பல வகைகள். சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட் (Orville Wright) மற்றும் வில்பர் ரைட் (Wilbur Wright) என்னும் இரு உடன்பிறந்தார்கள் முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் படைத்தார்கள். அமெரிக்காவில் உள்ள வட கேரோலைனா (North Carolina NC) என்னும் மாநிலத்தில் உள்ள கிட்டி ஃஆக் (Kitty Hawk) என்னும் இடத்தில் இப்புரட்சி மிக்க நிகழ்வு நடந்தது. இந்த புகழ் மிக்க வானூர்தியின் வரலாறு மிகவும் விரிவானது.