மே 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மே 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVIII |
மே 19 கிரிகோரியன் ஆண்டின் 139ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 140ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
- 1536 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி "ஆன் பொலெயின்" வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
- 1604 - கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது.
- 1649 - இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
- 1848 - மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
- 1897 - ஐரிய எழுத்தாளர் ஒஸ்கார் வைல்ட் இங்கிலாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
- 1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது.
- 1971 - சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
- 1978 - விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
- 1991 - அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1762 - யோஃகான் ஃபிக்டே, ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1814)
- 1882 - மொஹம்மது மொஸாடெக், ஈரானியத் தேசிய இயக்கத்தின் தலைவர்
- 1890 - ஹோ ஷி மின், வியட்நாமியத் தலைவர் (இ. 1969)
- 1925 - பொல் பொட், கம்போடிய சர்வாதிகாரி (இ. 1998)
- 1925 - மால்கம் எக்ஸ், அமெரிக்க மனித உரிமைச்செயற்பாட்டாளர் (இ. 1965)
- 1976 - கெவின் கார்னெட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
[தொகு] இறப்புகள்
- 1904 - ஜாம்செட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (பி. 1839)
- 2007 - ஜோதி, தமிழ்த் திரைப்பட நடிகை