ஜூன் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூன் 30 கிரிகோரியன் ஆண்டின் 181ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 182ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1905 - விசேட தொடர்பியல் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
- 1960 - கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1971 - சோவியத்தின் சோயூஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
- 1997 - முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
- 1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
- 2002 - பிறேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.
[தொகு] பிறப்புகள்
- 1966 - மைக் டைசன், குத்துச் சண்டை வீரர்
- 1969 - சனத் ஜெயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
[தொகு] இறப்புகள்
- ???? - தாதாபாய் நவுரோஜி
- 1971 - விக்டர் பட்சாயெவ், சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1933
- 1971 - கியோர்கி டப்ரொவோல்ஸ்கி, சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1928)
- 1971 - விளாடிஸ்லாவ் வோல்கொவ், சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1935)
[தொகு] சிறப்பு நாள்
- கொங்கோ - விடுதலை நாள்