செப்டம்பர் 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 264வது நாளாகும். நெட்டாண்டுகளில் 265வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 101 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1792 - பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு ஆக்கப்பட்டது.
- 1938 - நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் கொல்லப்பட்டனர்.
- 1942 - உக்ரேனில் "டுனைவிட்சி" என்னும் இடத்தில் 2500 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
- 1964 - மோல்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1972 - பிலிப்பீன்ஸ் அதிபர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார்.
- 1981 - பெலீஸ், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1989 - இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1991 - ஆர்மேனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1995 - இந்துக் கடவுளான விநாயகரின் சிலைகள் பால் குடிக்கும் அதிசயம் இடம்பெற்றது.
- 1999 - தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1866 - எச். ஜி. வெல்ஸ், ஆங்கில எழுத்தாளர், (இ. 1946)
- 1954 - சினோசோ அபே, யப்பானிய அரசியல்வாதி
- 1963 - கேட்லி அம்ப்ரோஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பந்தாளர்
[தொகு] இறப்புகள்
- 1971 - Bernardo Houssay, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- 1989 - ராஜினி திரணகம, இலங்கையின் மனித உரிமை மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் (1954)
[தொகு] சிறப்பு நாள்
- உலக அமைதி நாள்
- மோல்ட்டா - விடுதலை நாள் (1964)
- பெலீஸ் - விடுதலை நாள் (1981)
- ஆர்மேனியா - விடுதலை நாள் (1991)