நவம்பர் 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 331வது நாளாகும். நெட்டாண்டுகளில் 332வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1703 - இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது.
- 1895 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
- 1895 - பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
- 1935 - இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது.
- 1940 - ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
- 1946 - பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
- 1971 - சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
- 1975 - கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1983 - கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
- 1999 - நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.
- 2001 - ஹபிள் தொலைக்காட்டி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
- 2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடியப் பாராளுமன்றம் வழங்கியது.
[தொகு] பிறப்புக்கள்
- 1934 - யோசப் பரராஜசிங்கம், இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், (இ. 2005)
- 1940 - புரூஸ் லீ, நடிகர் (இ. 1973)
- 1963 - திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1987)