அக்டோபர் 14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 14 கிரிகோரியன் ஆண்டின் 287வது நாளாகும். நெட்டாண்டுகளில் 288வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1066 - இங்கிலாந்தில் "ஹாஸ்டிங்க்ஸ்" என்ற இடத்தில் William the Conqueror இன் படைகள் சாக்சன் இராணுவத்தினரைத் தோற்கடித்து இங்கிலாந்தின் இரண்டாம் ஹரோல்ட் மன்னனைக் கொன்றனர்.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்த நாள் நாட்காட்டிகளில் இல்லை.
- 1773 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேயிலைக் கப்பல் மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.
- 1888 - Roundhay Garden Scene என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார்.
- 1903 - யாழ்ப்பாணத்தின் SS Jaffna என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணித்தது.
- 1925 - டமாஸ்கசில் பிரெஞ்சுக்காரர்களுக்கெதிரான போராட்டம் ஆரம்பமாயிற்று.
- 1926 - சிறுவர் நூல் வின்னீ-த-பூ (Winnie-the-Pooh) முதல் தடவையாக வெளியிடப்பட்டது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் "ரோயல் ஓக்" என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
- 1948 - இலங்கையில் முதன் முதலில் பாராளுமன்றம் கூடியது.
- 1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கார் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
- 1962 - கியூபாவுக்கு மேல் பறந்த U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.
- 1964 - லியோனிட் ப்ரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆனார்.
- 1968 - விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
- 1987 - டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் போராட்டம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1643 - முதலாம் பகதூர் ஷா, இந்தியாவின் முகலாய மன்னன் (இ. 1712)
- 1884 - சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், சட்டத்தரணி (இ. 1969)
- 1927 - அஞ்சலி தேவி, தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை.
[தொகு] இறப்புகள்
- 1981 - கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர் (பி. 1906)
- 2005 - சுந்தர ராமசாமி, தமிழ் எழுத்தாளர் (பி. 1931)