அக்டோபர் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 3 கிரிகோரியன் ஆண்டின் 276வது நாளாகும். நெட்டாண்டுகளில் 277வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 2333 - கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- 1778 - பிரித்தானியாவின் கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினான்.
- 1908 - பிராவ்டா செய்திப்பத்திரிகை லியோன் ட்ரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
- 1929 - சேர்பியர்கள், குரோசியர்கள் மற்றும் சிலவேனியர்களின் பகுதி யூகொஸ்லாவியா எனப் பெயரிடப்பட்டது.
- 1932 - ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1935 - இத்தாலி எதியோப்பியாவை தாக்கிக் கைப்பற்றியது.
- 1952 - ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
- 1981 - வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் "மேஸ்" சிறைச்சாலையில் ஐரிஷ் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
- 1985 - அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
- 1990 - ஜேர்மனியின் கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைந்தன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மேற்கு ஜேர்மனியுடன் இணைந்தது.
- 1993 - சோமாலியாவின் போர்பிரபு முகம்மது ஃபரா ஐடிட் என்பவரின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
- 2001 - வங்காள தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் கலீதா சியாவின் பங்களாதேஷ் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.