பெப்ரவரி 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | பெப்ரவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | |
MMVIII |
பெப்ரவரி 20 கிரிகோரியன் ஆண்டின் 51 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1547 - ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1627 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
- 1798 - பாப்பரசர் ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1835 - சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.
- 1910 - எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி (Boutros Ghali) கொல்லப்பட்டார்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா எனிவெட்டொக் தீவைக் கைப்பற்றியது.
- 1947 - புரூசியா நாடு கலைக்கப்பட்டது.
- 1962 - மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.
- 1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
- 1987 - அருணாசலப் பிரதேசம் அஸ்ஸாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
- 2002 - எகிப்தில் தொடருந்து ஒன்று தீப்பிடித்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1937 - ரொபேர்ட் ஹியூபர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர்
- 1945 - ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்
[தொகு] இறப்புகள்
- 1896 - ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், புலவர் (பி. 1820)
- 1907 - ஹென்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு வேதியியலாளர், (பி. 1852)
- 1916 - கிளாஸ் ஆர்னல்ட்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1844)
- 1972 - மரீயா கோப்பர்ட்-மேயெர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர், (பி. 1906)
- 1976 - ரெனே காசின், நோபல் பரிசு பெற்றவர். (பி. 1887)