நவம்பர் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 13 கிரிகோரியன் ஆண்டின் 317வது நாளாகும். நெட்டாண்டுகளில் 318வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1002 - இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டென்மார்க் மக்களையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
- 1887 - மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
- 1887 - நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
- 1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1970 - போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).
- 1971 - ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளிளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.
- 1985 - கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.
- 1989 - இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1990 - உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.
- 1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
- 1993 - தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
- 1995 - சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1934 - கமால் கமலேஸ்வரன், மேற்கத்திய இசைக் கலைஞர்.
[தொகு] இறப்புகள்
- 1989 - ரோகண விஜேவீர, இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (பி. 1943)
- 2002 - கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)
[தொகு] சிறப்பு நாள்
- பன்னாட்டு தொலைபேசி அகராதி நாள் (International Phone Dictionary Day)