ஜனவரி 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 26 கிரிகோரியன் ஆண்டின் 26வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1340 - இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான்.
- 1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர்.
- 1531 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
- 1788 - ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 1841 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை ஆக்கிரமித்தது.
- 1930 - இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.
- 1949 - ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.
- 1950 - இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.
- 1952 - பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் சேதமாக்கப்பட்டது.
- 1958 - ஜப்பானிய பயணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்கியதில் 167 பேர் கொல்லப்பட்டனர்.
- 1962 - ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.
- 1965 - இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
- 1980 - இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.
- 1983 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.
- 1992 - ரஷ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.
- 2001 - குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 2006 - வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
[தொகு] பிறப்புகள்
- 1904 - சோன் மக்பிறைட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988)
- 1911 - பொலிக்காப் கூஷ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1993)
- 1921 - அகியோ மொறிடா, ஜப்பானியத் தொழிலதிபர் (இ. 1999)
[தொகு] இறப்புகள்
- 1823 - எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர் (பி. 1749)
- 1895 - கெய்லி, கணிதவியலர் (பி. 1821)
- 1964 - தோமஸ் அடிகள், யாழ்ப்பாணம் தோலகட்டி ஆசிரம சுவாமிகள் (பி. 1886)
[தொகு] சிறப்பு நாள்
- ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலிய நாள் (1788)
- இந்தியா - குடியரசு நாள் (1950)
- உகாண்டா - விடுதலை நாள்