டிசம்பர் 31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டின் 365வது நாளாகும். நெட்டாண்டுகளில் 366வது நாள். ஆண்டின் இறுதி நாள் இதுவாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- 1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தொடங்கப்பட்டது.
- 1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
- 1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
- 1881 - இலங்கை முழுவதும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 1909 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.
- 1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணி ஒலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
- 1946 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா எனப் பிளவுற்றது.
- 1981 - கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் ஹில்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
- 1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
- 1986 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் உணவுசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தினால் 97 பேர் கொல்லப்பட்டு 140 பேர் காயமடைந்தனர்.
- 1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது.
- 1994 - கிரிபட்டியில் நேரமாற்றம் காரணமாக இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது..
- 1999 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
- 1999 - ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
- 2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
- 2006 - ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.
[தொகு] பிறப்புகள்
- 1880 - ஜோர்ஜ் மார்ஷல், நோபல் விருது பெற்ற அமெரிக்கர் (இ. 1959)
- 1937 - அவ்ராம் ஹேர்ஷ்கோ, நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
[தொகு] இறப்புகள்
- 2001 - தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)