அக்டோபர் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 2 கிரிகோரியன் ஆண்டின் 275வது நாளாகும். நெட்டாண்டுகளில் 276வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1263 - நோர்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.
- 1903 - யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற அமைப்பிற்குச் சொந்தமான "SS Jaffna" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
- 1935 - இத்தாலி அபிசீனியாவை (எதியோப்பியா)வை ஆக்கிரமித்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1946 - பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.
- 1958 - கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1968 - மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1990 - சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 132 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1869 - மகாத்மா காந்தி, (இ. 1948)
- 1904 - லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர், (இ. 1966)
- 1925 - ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
[தொகு] இறப்புகள்
- 1906 - ராஜா ரவி வர்மா, இந்தியாவின் பிரபல ஓவியர் (பி. 1848)
- 1975 - காமராஜர், இந்திய அரசியல் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1903)
- 1980 - சேர் ஜோன் கொத்தலாவல, இலங்கை அரசியல் தலைவர்.
[தொகு] சிறப்பு நாள்
- இந்தியா - காந்தி ஜெயந்தி
- கினி - விடுதலை நாள் (1958)
- அனைத்துலக வன்முறையற்ற நாள்