ஜூலை 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 5, கிரிகோரியன் ஆண்டின் 186வது நாளாகும். நெட்டாண்டுகளில் 187வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1687 - ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.
- 1811 - வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1830 - பிரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமித்தது.
- 1865 - Salvation Army இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1884 - ஜெர்மனி கமரூனை ஆக்கிரமித்தது.
- 1954 - பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது
- 1962 - பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
- 1970 - கனடா விமானம் டொரொண்டோ விமான நிலையத்தில் மோதியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
- 1971 - ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது வரம்பு 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
- 1977 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
- 1987 - விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் நெல்லியடியில் இடம்பெற்றது.
- 1992 - இயக்கச்சியில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1653 - தாமஸ் பிட் (Thomas Pitt), மதராசின் பிரித்தானிய ஆளுநர் (இ. 1726)
- 1996 - டோலி, முதல் குளோனிங் பாலூட்டி (இ. 2003)
[தொகு] இறப்புகள்
- 1987 - கப்டன் மில்லர், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி (பி. 1966)
[தொகு] சிறப்பு நாள்
- வெனிசுவேலா - விடுதலை நாள் (1811)
- அல்ஜீரியா - விடுதலை நாள் (1962)
- கேப்வேட் - விடுதலை நாள் (1975).
- ஆர்மீனியா - அரசியலமைப்பு நாள் (1995)
- தமிழீழம் - கரும்புலிகள் நாள்