பெப்ரவரி 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | பெப்ரவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | |
MMVIII |
பெப்ரவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 55 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1387 - நேப்பில்ஸ் மற்றும் ஹங்கேரி மன்னன் மூன்றாம் சார்ல்ஸ் கொல்லப்பட்டான்.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1739 - இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.
- 1826 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
- 1875 - ஆஸ்திரேலியக் கிழக்குக் கரையில் எஸ்எஸ் கோத்தன்பேர்க் என்ற கப்பல் முழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.
- 1881 - சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1918 - எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
- 1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1942 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1945 - எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
- 1969 - மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
- 1981 - கிரேக்கத்தில் ஏத்தன்ஸ் நகரில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் கொல்லப்பட்டனார்.
- 1999 - கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1304 - இபின் பட்டூட்டா, பயணி
- 1886 - ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்
- 1948 - ஜெ. ஜெயலலிதா, முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர்
- 1955 - ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்
[தொகு] இறப்புகள்
- 1925 - ஹீஜால்மார் பிராண்டிங், நோபல் பரிசு பெற்ற சுவீடன் பிரதமர் (பி. 1860)
- 1986 - ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)