டிசம்பர் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 363வது நாளாகும். நெட்டாண்டுகளில் 364வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 2 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1170 - இங்கிலாந்து, கண்டர்பரி ஆயர் தோமஸ் பெக்கர் அவரது தேவாலயத்தில் வைத்து இரண்டாம் ஹென்றி மன்னனின் நான்கு ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1690 - இத்தாலியின் அன்கானோர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயோர்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர்.
- 1876 - ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் தொடருந்து பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர்.
- 1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
- 1891 - தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1911 - சுன் யாட்-சென் என்பவர் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாசி ஜெர்மனியர் தீக்குண்டுகள் வீசியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 - 326 நாட்கள் விண்வெளியில் சஞ்சரித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
- 1989 - ஹொங்கொங் வியட்நாமிய அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு காலவரம் மூண்டது.
- 1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.
- 1996 - குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
- 1998 - கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
- 2001 - பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1942 - ராஜேஷ் கண்ணா, இந்தி நடிகர்.
- 1971 - பிறட் ஹொட்ஜ், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
[தொகு] இறப்புகள்
- 1924 - கார்ள் ஸ்பிட்டெலெர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து எழுத்தாளர் (பி. 1845)
- 2004 - ஜூலியஸ் அக்செல்ரொட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1912)
[தொகு] சிறப்பு நாள்
- சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்