ஜனவரி 16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 16 கிரிகோரியன் ஆண்டின் 16வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1556 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான். அவனது தம்பி பேர்டினண்ட் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
- 1581 - இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.
- 1707 - ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
- 1761 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1795 - பிரான்ஸ், நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.
- 1945 - ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு சென்றார்.
- 1979 - ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.
- 1991 - ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது.
- 1992 - எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
- 1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து தமிழீழம் திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
- 2001 - கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2003 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.
- 2005 - ஏட்ரியானா இலியெஸ்க்கு தனது 66வது வயதில் குழந்தை பெற்றதன் மூலம் உலகின் மிக அதிக வயதுத் தாயானார்.
- 2008 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.
- 2008 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.
[தொகு] பிறப்புகள்
- 1932 - டயான் ஃபொஸி, கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)
[தொகு] இறப்புகள்
- 1711 - யோசப் வாஸ் அடிகள், கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த குருவானவர் (பி. 1651)
- 1967 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)
- 1993 - கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்), விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், தளபதியும் (பி. 1961)
[தொகு] சிறப்பு நாள்
- தாய்லாந்து: ஆசிரியர் நாள்