ஏப்ரல் 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 6 கிரிகோரியன் ஆண்டின் 96ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 97ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
- 1782 - தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான்.
- 1814 - நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர்.
- 1869 - செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
- 1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
- 1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.
- 1936 - ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது.
- 1965 - "ஏளி பேட்" (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.
- 1968 - இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
- 1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
- 1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.
- 2005 - குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அதிபரானார்.
[தொகு] பிறப்புகள்
- 1483 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)
- 1815 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876
- 1911 - பியோதர் லைனென், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1979)
- 1920 - எட்மண்ட் பிஷர், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்
- 1928 - ஜேம்ஸ் வாட்சன், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1949 - ஹோர்ஸ்ட் ஸ்டோர்மர், நோபல் பரிசு பெற்றவர்
- 1963 - ரஃப்வேல் கோர்ரியா, ஈக்குடோர் நாட்டின் அதிபர்
[தொகு] இறப்புகள்
- 1520 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483)
- 1961 - ஜூல்ஸ் போர்டெட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1870)