ஏப்ரல் 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 4 கிரிகோரியன் ஆண்டின் 94ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 95ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1814 - நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்தான்.
- 1850 - இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
- 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார்.
- 1866 - ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பித்தான்.
- 1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை பலியாயினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் ஹங்கேரியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- 1949 - பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
- 1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டார்.
- 1968 - அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1969 - டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.
- 1973 - உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.
- 1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ் மாற்றும் போல் அலென் ஆகியோரின் கூட்டில் தொடங்கப்பட்டது.
- 1975 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
- 1976 - இளவரசர் நொரொடோம் சிஹானூக் கம்போடியா தலைவர் பதவியில் இருந்த் விலகினார். இவர் பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
- 1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
- 1983 - சலேஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
- 1999 - பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யூகொஸ்லாவியா மீது குண்டுகளை வீசின.
- 2002 - அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- 1841 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அதிபர் (பி. 1773)
- 1929 - கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய வாகனப்பொறியாளர், (பி. 1844)
- 1968 - மார்டின் லூதர் கிங், கறுப்பினத் தலைவார். (பி. 1929)
- 1979 - சுல்பிகார் அலி பூட்டோ, பாகிஸ்தான் அதிபர் (பி. 1928)
- 1990 - கி. இலட்சுமண ஐயர், ஈழத்து எழுத்தாளர்
[தொகு] சிறப்பு நாள்
- நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
- தாய்வான், ஹொங்கொங் - சிறுவர் நாள்
- செனகல் - விடுதலை நாள்