நவம்பர் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 17 கிரிகோரியன் ஆண்டின் 321வது நாளாகும். நெட்டாண்டுகளில் 322வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1292 - ஜோன் பலியல் (John Balliol) ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான்.
- 1511 - ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
- 1796 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
- 1820 - கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
- 1831 - எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
- 1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
- 1878 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
- 1918 - யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
- 1903 - ரஷ்யாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்ஷெவிக், மேன்ஷெவிக் என இரண்டாகப் பிளவுண்டது.
- 1922 - முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
- 1939 - செக் நாட்டில் நாசி எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- 1950 - 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
- 1968 - அலெக்சாண்ட்ரொஸ் பனகோலிஸ் என்பவர் கிரேக்க சர்வாதிகாரி ஜோர்ஜ் பப்படொபவுலொசைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
- 1970 - லூனா திட்டம்: சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
- 1970 - டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.
- 1989 - பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
- 2003 - ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1904 - இசாமு நொகுச்சி சிற்பக் கலைஞரும், கட்டடக் கலைஞரும் (இ. 1988)
- 1920 - ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005)
[தொகு] இறப்புகள்
- 1558 - இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி (பி. 1516)