பெப்ரவரி 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | பெப்ரவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | |
MMVIII |
பெப்ரவரி 9 கிரிகோரியன் ஆண்டின் 40 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1822 - ஹெயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
- 1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.
- 1895 - வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்.
- 1897 - பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1900 - இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 1900 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1904 - போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது.
- 1942 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1962 - பொதுநலவாய அமைப்பினுள் ஜமெய்க்கா விடுதலை பெற்றது.
- 1965 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
- 1969 - போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
- 1971 - கலிபோர்னியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1971 - அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.
- 1975 - சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
- 1986 - ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
- 1991 - லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
- 1996 - ஐரிஷ் குடியரசு இராணுவம் தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்பாட்டினை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1773 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1841)
- 1910 - ஜாக் மொனோட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)
- 1940 - ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர்
- 1943 - ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1970 - கிளென் மெக்ரா, அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
- 1979 - சாங் சீயீ, சீனத் திரைப்பட நடிகை
[தொகு] இறப்புகள்
- 1881 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, இரசிய நாவலாசிரியர் (பி. 1821)
- 1977 - ஜி. ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் (பி. 1901)
- 1979 - டெனிஸ் காபோர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
- 1984 - யூரி அந்திரோபொவ், சோவியத் அதிபர் (பி. 1914)
- 1994 - ஹ்வார்ட் டெமின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1934)
- 2001 - ஹேர்பேர்ட் சைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1916)