ஜூலை 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 13 கிரிகோரியன் ஆண்டின் 194வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 195வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
- 1908 - ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.
- 1912 - மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அல்-ஹிலால் என்ற உருது பத்திரிகையை வெளியிட்டார்.
- 1931 - காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
- 1977 - மின்சார இழப்பினால் நியூ யோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
- 1989 - இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம், மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
- 2001 - சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
- 2005 - பாகிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1841 - ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக் கலைஞர் (இ. 1918)
- 1934 - வோல் சொயிங்கா, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர்.
- 1953 - வைரமுத்து, தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர்.
[தொகு] இறப்புகள்
- 1974 - பட்றிக் பிளாக்கெட் (Patrick Blackett), நோபல் பரிசு பெற்றவர் (பி. 1891)
- 1989 - அ. அமிர்தலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் (பி. 1927)