டிசம்பர் 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 343வது நாளாகும். நெட்டாண்டுகளில் 344வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
- 1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
- 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
- 1922 - போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார்.
- 1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர். இத்தாக்குதலுக்கு ஒப்பரேஷன் கொம்பாஸ் (operation compass) எனப் பெயரிடப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது போரை அறிவித்தன.
- 1946 - இந்திய அரசியல் நிர்ணய சபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
- 1953 - ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
- 1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனிக்கா விடுதலை பெற்றது.
- 1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
- 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
- 1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
- 1992 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
- 2003 - மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1946 - சோனியா காந்தி, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்.
[தொகு] இறப்புகள்
- 1971 - Ralph Bunche, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
- 2006 - சு. வில்வரத்தினம் (சு.வி.) ஈழத்துக் கவிஞர் (பி. 1950)
[தொகு] சிறப்பு நாள்
- தான்சானியா - விடுதலை நாள் (1961)