நவம்பர் 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314வது நாளாகும். நெட்டாண்டுகளில் 315வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1444 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் துருக்கியர்களுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
- 1520 - டென்மார்க் அரசன் சுவீடனை முற்றுகையிட்டபோது ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக் கொன்றான்.
- 1871 - காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணியும் மிஷனரியுமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
- 1918 - யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
- 1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார்.
- 1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
- 1971 - கம்போடியாவில் கெமர் ரூஜ் படைகள் "ஃப்நொம் பென்" நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
- 1972 - பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
- 1993 - தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1995 - நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
- 1999 - பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
- 2006 - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1919 - மிக்கையில் கலாஷ்னிகோவ், ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தவர்.
- 1934 - அ. துரைராசா, பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1994)
- 1957 - டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்
[தொகு] இறப்புகள்
- 1982 - லியோனீட் பிரெஷ்னேவ், சோவியத் யூனியன் தலைவர் (பி. 1906)
- 2006 - நடராஜா ரவிராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் (பி. 1962)