மார்ச் 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டின் 83ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 84ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 282 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1878 - பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
- 1923 - கிறீஸ் குடியரசாகியது.
- 1944 - ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறைய்யில் இருந்ட்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர்.
- 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.
- 1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1965 - நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.
- 1972 - ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.
- 1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.
- 1999 - கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொஸ்லாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.
- 1999 - பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1776 - முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர். (இ. 1835)
- 1884 - பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1966)
- 1903 - அடொல்ஃஃப் பியூட்டினண்ட், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1995)
- 1917 - ஜோன் கெண்ட்ரூ, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1997)
- 1984 - கிரிஸ் பாஷ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
[தொகு] இறப்புக்கள்
- 1905 - ஜூல்ஸ் வேர்ன், பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1828)
- 1988 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசை பாடகர் (பி. 1933)
- 2002 - சேசார் மில்ஸ்டைன், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1927)