செப்டம்பர் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 3 கிரிகோரியன் ஆண்டின் 246வது நாளாகும். நெட்டாண்டுகளில் 247வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 119 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 301 - உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ உருவாக்கப்பட்டது.
- 1783 - அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. பாரிசில் அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1801 - இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1878 - தேம்ஸ் நதியில் "பிரின்சஸ் அலைஸ்" பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேர் கொல்லப்பட்டனர்.
- 1939 - இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாயிற்று. பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன ஜேர்மனி மீது போர் தொடுத்தன.
- 1971 - கட்டார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்காலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
- 2004 - ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலை முடிவுக்கு வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1658 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (பி 1599)