நவம்பர் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 323வது நாளாகும். நெட்டாண்டுகளில் 324வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1493 - கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.
- 1881 - உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் (meteor) ஒன்று வீழ்ந்தது.
- 1932 - சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதி 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 ஜெர்மனியர்களும் கொல்லப்பட்டனர்.
- 1969 - அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
- 1977 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
- 1977 - போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
- 1984 - இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- 1984 - மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 500 பேர் கொல்லப்பட்டனர்.
- 1985 - பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
- 1991 - தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
- 2005 - மகிந்த ராஜபக்ச இலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1835 - லக்ஷ்மி பாய், இந்திய இராணி (இ. 1858).
- 1909 - பீட்டர் டிரக்கர் ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (இ. 2005).
- 1917 - இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் (இ. 1984).
[தொகு] இறப்புகள்
- 1998 - டெட்சுயா ஃபுஜித்தா, யப்பானிய வானிலை அறிஞர் (பி. 1920)
[தொகு] சிறப்பு நாள்
- மாலி - விடுதலை நாள்