செப்டம்பர் 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 265வது நாளாகும். நெட்டாண்டுகளில் 266வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 100 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1499 - சுவிட்சர்லாந்து சுதந்திர நாடாகியது.
- 1784 - அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- 1877 - யாழ்ப்பாணம் ஜாஃப்னா கத்தலிக் கார்டியன் (Jaffna Catholic Guardian) பத்திரிகையின் ஆசிரியராக தமிழறிஞர் அருளப்ப முதலியார் நியமிக்கப்பட்டார்.
- 1893 - அமெரிக்காவில் முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட தானுந்து காட்சிப்படுத்தப்பட்டது.
- 1908 - பல்கேரியாவின் விடுதலை ஆங்கீகாரம் பெற்றது.
- 1914 - ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது.
- 1934 - வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 - யூதர்களின் புத்தாண்டில் உக்ரேனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முத நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரினுள் நுழைந்தனர்.
- 1960 - மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனெகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1965 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.
- 1970 - மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியை விட்டு விலகினார்.
- 1980 - ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.
- 1995 - நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது 12:50 மணிக்கு இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
- 2006 - MSN தமிழ், ஹிந்தி பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது.
[தொகு] பிறப்புக்கள்
- 1791 - மைக்கேல் பரடே, ஆங்கில அறிவியலாளர் (இ. 1867)