ஏப்ரல் 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டின் 114ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 115ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1704 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது.
- 1863 - கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1877 - ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போரை அறிவித்தது.
- 1908 - லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
- 1913 - வானளாவிக் கோபுரம் வூல்வேர்த் கோபுரம் நியூயார்க் நகரில் கட்டப்பட்டது.
- 1915 - ஓட்டோமான் பேரரசு, கொன்ஸ்டன்டீனபோலில் நூற்றுக்கணக்கான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
- 1955 - இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவெறி, மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 1961 - 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.
- 1965 - டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
- 1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
- 1968 - மொரீசியஸ் ஐநாவின் உறுப்பு நாடாகியது..
- 1970 - முதல் சீனச் செய்மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்பட்டது.
- 1970 - காம்பியா பொதுநலவாய அமைப்பினுள் குடியரசாகியது.
- 1981 - முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது.
- 1990 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
- 1993 - இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.
- 1993 - லண்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
- 2006 - நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
- 2007 - பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
[தொகு] பிறப்புகள்
- 1820 - ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908)
- 1845 - கார்ல் ஸ்பிட்டெலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1924)
- 1934 - ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர்.
- 1951 - தம்பிஐயா தேவதாஸ், ஈழத்து எழுத்தாளர்
- 1973 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாட்ட மட்டையாளர்
[தொகு] இறப்புகள்
- 1960 - மாக்ஸ் லாவுவே, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1879)
- 1964 - ஜெரார்ட் டொமாக், மருத்துவத்துக்கான நோபல் பரிசினை மறுத்த ஜேர்மானியர் (பி. 1895)