ஜூலை 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 10 கிரிகோரியன் ஆண்டின் 191வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 192வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 174 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 988 - டப்ளின் நகரம் நிர்மாணிக்கப்பட்டது.
- 1212 - லண்டனில் இடம்பெற்ற மெரும் தீயில் நகரின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகியது.
- 1806 - முதல் இந்திய விடுதலைப் போர் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் 100 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
- 1925 - சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
- 1962 - உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.
- 1973 - பஹாமாஸ் முழுமையான விடுதலை அடைந்தது.
- 1973 - வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தானின் தேசிய சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1991 - யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.
- 2006 - இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.
[தொகு] பிறப்புகள்
- 1925 - மகத்திர் மொகமட், மலேசியப் பிரதமர்.
- 1949 - சுனில் கவாஸ்கர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
[தொகு] இறப்புகள்
- 1990 - காந்தரூபன், விடுதலைப் புலிகளின் கரும்புலிகளில் ஒருவர் (பி. 1971)